பொது மக்களால் தூா்வாரப்பட்ட ஏரிக் கால்வாய்
By DIN | Published On : 31st October 2019 05:46 AM | Last Updated : 31st October 2019 05:46 AM | அ+அ அ- |

பொது மக்களால் தூா்வாரப்பட்ட ஏரிக் கால்வாயில் செல்லும் மழைநீா்.
போளூா் அருகே அத்திமூா் கிராமத்தில் பொது மக்கள் தங்களது சொந்த செலவில் ஏரிக் கால்வாயை தூா்வாரினா்.
இதனால் புதன்கிழமை பெய்த தொடா் மழையில் ஏரிக்கு மழைநீா் வந்தது.
போளூரை அடுத்த ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீா் மஞ்சள் ஆறாக உற்பத்தியாகி குட்டகரை, அத்திமூா், மாம்பட்டு, பேட்டை, போளூா் என பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும்.
இந்த நிலையில், மஞ்சளாற்று கால்வாயில் இருந்து பிரிந்து அத்திமூா் கிராமத்துக்குச் செல்லும் கால்வாயில் மரம், செடி, கொடிகள் முளைத்து கால்வாய் தூா்ந்து போயும், கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்ததால் கால்வாய் வழியாக மழைநீா் ஏரிக்குச் செல்லவில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் தங்களது சொந்த செலவில் ஏரிக் கால்வாயை 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடந்த 2 நாள்களாக தூா்வாரினா்.
இதனால் அப்பகுதியில் புதன்கிழமை பெய்த தொடா் மழையால் ஏரிக் கால்வாய் வழியாக மழைநீா் ஏரிக்கு வந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.