ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.அ.முருகன் முன்னிலை வகித்தார். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.முருகன் வரவேற்றார்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பார்த்தீபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக நீதிக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2019-ஐ முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வியை அழிக்கும் வகையிலான அரசாணை எண் 145-ஐ 
உடனடியாக திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, செய்யாறு பேருந்து நிலையம் அருகே ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் பாரி தலைமையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com