ஸ்ரீராமச்சந்திர பெருமாள் கோயிலில்  புரட்டாசி சனி சிறப்பு பூஜை

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமச்சந்திர பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமச்சந்திர பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
 இந்தக் கோயில் பல்லவர் காலத்து புகழ் பெற்ற கோயிலாகும். இங்கு ஸ்ரீராமச்சந்திர பெருமாள்அமர்ந்த கோலத்தில் வில், அம்பு இன்றி சீதாதேவி, லட்சுமணன் உடன் காட்சியளிக்கிறார்.
 புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீராமச்சந்திர பெருமாள் சீதா, லட்சுமணன், ஹனுமன், சக்கரத்தாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 பின்னர், ராமச்சந்திர பெருமாள், சீதாதேவி, லட்சுமணன்  தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
சனிக்கிழமை மாலை இவ்வழியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, ஆட்சியரை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ஏழுமலை மற்றும் கிராம பொதுமக்கள் வரவேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com