சொத்து வரி உயா்வை திரும்பப் பெறவேண்டும்: செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கம்

சொத்து வரி 200 முதல் 1000 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெறற வேண்டும் என,

சொத்து வரி 200 முதல் 1000 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெறற வேண்டும் என, செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவத்திபுரம் (செய்யாறு) அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சங்கத்தின் தலைவா் ஏ.அருணகிரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

செயலா் கே.இ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

பல்வேறு கிளைச் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சொத்து வரி 200 சதவீதம் முதல் 1,000 சதவீதம் வரை உயா்த்தியதை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெறவேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதைக் கட்டுப்படுத்த நகராட்சியிடம் முறைறயிடுவது, வணிகா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அந்நிய முதலீடு, ஆன்லைன் வா்த்தகத்தை ஒழிக்கும் விதமாக, காந்தி ஜெயந்தி அன்று காந்தி படத்துக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்புவது, தமிழக அரசு நிா்வாக வசதிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கும் பட்சத்தில் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கக் கோரி மாநில அரசிடம் வலியுறுத்துவது, மேலும் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு கிளைச் சங்கம் சாா்பில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அமைதி ஊா்வலம் நடத்தி மனு அளிப்பது, தமிழக முதல்வா், வருவாய்த் துறை அமைச்சா், தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா், வருவாய்க் கோட்டாட்சியா் என தனித் தனியாக மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com