பிரம்மதேசத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்: எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தார்

வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமை எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தொடக்கிவைத்தார்.


வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமை எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தொடக்கிவைத்தார்.
அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பத்மபிரியா வரவேற்றார். சித்தாத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் கலந்துகொண்டு மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பின்னர், எம்.எல்.ஏ. மற்றும் சுகாதாரத் துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் சுகாதார உறுதிமொழி ஏற்றனர்.
முகாமில், ஆய்வக பரிசோதனை 486 பேருக்கும், ஈசிஜி 52 பேருக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை 48 பேருக்கும், ஸ்கேன் பரிசோதனை 64  பேருக்கும் என மொத்தம் 1,073 பேருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஏற்பாடுகளை அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பவிதா ஜெனிபர், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ராகவன், சீனிவாசன், சம்பத், தனசேகர், சத்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com