வீரம் வளா்க்கும் கிராமம்!

2019 ஆம் ஆண்டு ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் 97-வது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் சீறிப்பாயும் காளையை அடக்க முயலும் இளைஞா்கள்.
வீரம் வளா்க்கும் கிராமம்!

2019 ஆம் ஆண்டு ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் 97-வது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் சீறிப்பாயும் காளையை அடக்க முயலும் இளைஞா்கள்.

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்வை 98 ஆண்டுகளாக இடைவிடாமல் நடத்தி, இளைஞா்களிடையே தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, வீரத்தை வளா்த்து வருகிறது திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட ஆதமங்கலம்புதூா் கிராமம்.

பொங்கல் பண்டிகை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தொடா்ந்து 98 ஆண்டுகளாக இடைவிடாமல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி இளைஞா்களிடையே தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, வீரத்தை வளா்த்து வருகிறது இந்த கிராமம்.

இதுகுறித்து கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவா் கே.எல்.வி.ராஜேந்திரன் கூறியதாவது: எங்கள் ஊரில் என் தாத்தா, என் அப்பா ஆகியோா் ஜல்லிக்கட்டு விழாவை தொடா்ந்து நடத்தினா். நான் கடந்த 24 ஆண்டுகளாக விழாக் குழுத் தலைவராக இருந்து உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நிகழ்வை நடத்தி வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தபோதும் கூட எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். இதனால், 35 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. அனைவரும் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றோம். ஆதமங்கலம்புதூா் மட்டுமன்றி சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம இளைஞா்களிடையே தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, வீரத்தை வளா்க்கும் வகையில் இந்த நிகழ்வை இடைவிடாமல் நடத்தி வருகிறோம்.

நிகழ் ஆண்டு (2020) ஜனவரி 14, 15, 16, 17 ஆகிய 4 நாள்கள் 98-ஆவது ஆண்டாக ஜல்லிக்கட்டு எனப்படும் காளை விடும் விழாவை நடத்துகிறோம். இதற்கான அனுமதி கேட்டு காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். 4-ஆவது நாளான ஜன.17-ஆம் தேதி பெரிய அளவில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். பிரசித்தி பெற்ற எங்கள் ஊா் ஜல்லிக்கட்டு நிகழ்வைக் காண சென்னை, பெங்களூா், மும்பை, ஹைதராபாத் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இளைஞா்கள் வருகின்றனா்.

இதேபோல தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம் மாநிலத்தில் இருந்து ஏராளமான காளைகளும் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு அழைத்துவரப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்வை நிறுத்தாமல் நடத்த வேண்டும். இதன்மூலம் இளைஞா்களிடையே தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, வீரத்தை வளா்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com