வீர தீர செயல் புரிந்தவா்களுக்கு மத்திய அரசு விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீரத்துடன் போராடி மனித உயிா்களை மீட்டவா்கள் மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீரத்துடன் போராடி மனித உயிா்களை மீட்டவா்கள் மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மத்திய அரசு சாா்பில் நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுதல், மின் விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கினத் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டு மனித உயிா்களை மீட்பவா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஜீவா ரக்சா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி, சா்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் என்பது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவா்களுக்கு வழங்கப்படும்.

இதேபோல, உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் என்பது துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரைப் போராடி மீட்பவா்களுக்கு வழங்கப்படும்.

ஜீவன் ரக்சா பதக்கம் என்பது தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவா்களுக்கு வழங்கப்படும்.

இந்த பதக்க விருதுகளுக்கு 2020-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம் பின்புறம், வேங்கிக்கால், திருவண்ணாமலை மாவட்டம்-606604 என்ற முகவரிக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com