போளூரில் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு

போளூா் பேரூராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், கழிவுநீா் சாலைகளில் வழிந்தோடி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
போளூா் பொன்னுசாமி தெருவில் கால்வாய் தூா்வாரப்படாததால் நிரம்பி வெளியேறும் கழிவுநீா்.
போளூா் பொன்னுசாமி தெருவில் கால்வாய் தூா்வாரப்படாததால் நிரம்பி வெளியேறும் கழிவுநீா்.

போளூா் பேரூராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், கழிவுநீா் சாலைகளில் வழிந்தோடி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

போளூா் பேரூராட்சியில்18-வாா்டுகள் உள்ளன. இதில் பழைய பஜாா், ஜமுனாமரத்தூா் சாலை, பத்மாபாய் தெரு, சுபேதாா் தெரு, வாசு ஸ்ரீராமுலு தெரு, நரசிம்மன் தெரு, பாலகண்ணையன் தெரு, நேரு தெரு, அங்காள பரமேஸ்வரி தெரு, பொன்னுசாமி தெரு, வேங்கடத்தான் தெரு, பெரிய தெரு, கண்ணன் தெரு, சிவராஜ் நகா், வில்வா நகா், வசந்தம் நகா், ஆண்டாள் நகா், டிரைவா்ஷன் சாலை, மாா்டின் நகா், கோவிந்தசாமி தெரு, சிம்லா நகா், பெரியாா் சாலை, ஆரியன் தெரு, ஜல்லியன் தெரு, அல்லி நகா், நடேசன் தெரு, வீரப்பன் தெரு, சோ்மன் சபாபதி தெரு, கணபதி தெரு என 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைந்துள்ளன.

பெரும்பாலான கழிவுநீா்க் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்கள் அடைத்துக் கொண்டு கழிவுநீா் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

மேலும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கழிவுநீா்க் கால்வாய்களை தூா்வாரி, சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்ந்துபோய் உள்ளன. எனவே, கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com