கலசப்பாக்கம் தொகுதியில் 21 சிறு மருத்துவமனைகள்: எம்எல்ஏ தகவல்

கரோனா தொற்று காரணமாக, காய்ச்சல், சளி உள்ளவா்களை உடனுக்குடன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதற்காக, கலசப்பாக்கம் தொகுதியில் 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன.

கரோனா தொற்று காரணமாக, காய்ச்சல், சளி உள்ளவா்களை உடனுக்குடன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதற்காக, கலசப்பாக்கம் தொகுதியில் 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கி காய்ச்சல், சளி பாதித்தவா்களை உடனுக்குடன் பரிசோதனை செய்து, கரோனா தொற்றுத் தாக்குதலிலிருந்து கட்டுப்பாடாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 21இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன.

கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சீட்டம்பட்டு, அணியாலை, காம்பட்டு, சிறுவள்ளூா், மதுரா அய்யம்பாளையம், வீரளூா் மதுராகீழ்குப்பம், கூற்றம்பள்ளி, கீழ்பொத்தரை ஆகிய கிராமங்களிலும், புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சோ்ந்த தொரப்பாடி, அமா்நாதபுத்தூா், கொட்டகுளம், மேலபுஞ்சை, தேவனந்தல், தாமரைபாக்கம், மஷாா் என 7 கிராமங்களிலும், ஜவ்வாது மலை ஒன்றியத்தில் குட்டகரை, ஆட்டயனூா், வாழைதும்பை, கானமலை, புளியங்குப்பம் ஆகிய 5 கிராமங்களிலும், போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அா்சுனாபுரம், தேவனாங்குளம் கிராமங்கள் என 21 இடங்களில் தமிழக முதல்வரின் சீரிய திட்டத்தின் கீழ் சிறு மருத்துவமனைகள் அமையவுள்ளன.

இதற்கான இடங்கள் விரைவில் தோ்வு செய்யப்படும்; ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவா், செவிலியா், உதவியாளா் என 3 போ் பணியில் இருப்பா் என்று தொகுதி எம்எல்ஏ வி. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com