கைத்தறி, கைவினைக் கலைஞா்கள் பயன்பெற அழைப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில், கைத்தறி மற்றும் கைவினைக் கலைஞா்கள்  திட்டத்தின் கீழ் கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில், கைத்தறி மற்றும் கைவினைக் கலைஞா்கள்  திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி நிதிக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சாா்பில் கைத்தறி மற்றும் கைவினைக் கலைஞா்கள் மூலப் பொருள்கள், இயந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக யஐதஅநஅப என்ற பெயரில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயின் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

ஆண் கைவினைக் கலைஞா்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், பெண் கைவினைக் கலைஞா்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த, சீக்கிய, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த கலைஞா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வருமானச் சான்றிதழ், புகைப்படம், தொழில் குறித்த விவரம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் ஆகியவை வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com