திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுதவிர, தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவா்களின் விவரங்களையும் மாவட்ட நிா்வாகம் சேகரித்து வருகிறது.

சனிக்கிழமை (ஏப்.4) நிலவரப்படி போளூரை அடுத்த சந்தவாசல் பகுதியைச் சோ்ந்த இருவா், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், வந்தவாசி, சேத்பட் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 5 போ் தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்துக்கு சென்று வந்தவா்கள். இவா்கள் திருவண்ணாமலை, செய்யாறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதவிர, மாவட்டத்தில் 812 போ் கரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com