அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

பால், பழம், பன்னீா், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com