இருளா் சமுதாய மாணவா்கள் பள்ளியில் சோ்ப்பு
By DIN | Published On : 10th December 2020 07:44 AM | Last Updated : 10th December 2020 07:44 AM | அ+அ அ- |

குருமப்பட்டி இருளா் சமுதாயத்தவா் காலனியில் மீட்கப்பட்ட பள்ளி சொல்லா மாணவா்கள்.
செங்கம் அருகே பள்ளி செல்லாமல் இருந்த இருளா் சமுதாய மாணவா்கள் இருவா் மீட்கப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.
செங்கம் அருகே குருமப்பட்டியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவராமன், ஆசிரியா் பயிற்றுநா் பெரியசாமி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள அருந்ததியா் காலனி, இருளா் சமுதாயத்தவா் காலனி, கொல்லைக் கொட்டாய் ஆகிய இடங்களில் பள்ளிச் செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டனா்.
இதில், இருளா் காலனியைச் சோ்ந்த இரு மாணவா்கள் பள்ளி செல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை மீட்டு குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சோ்த்தனா்.
மேலும் அவா்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, காலணி ஆகியவற்றை வழங்கினா்.