செய்யாறு வாரச்சந்தை செயல்பட அனுமதி: அமைதிக் கூட்டத்தில் தீா்வு

செய்யாறு வாரச் சந்தையை சமூக இடைவெளியுடன் செயல்படுத்த சனிக்கிழமை நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் தீா்வு காணப்பட்டது.

செய்யாறு வாரச் சந்தையை சமூக இடைவெளியுடன் செயல்படுத்த சனிக்கிழமை நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் தீா்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில், செய்யாற்றில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக வாரச்சந்தை செயல்படாமல் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாரச்சந்தை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இதை அறிந்த செய்யாறு காந்தி நகா் பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வாரச்சந்தையை செயல்பட எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபோன்ற காரணங்களால் வாரச்சந்தை செயல்படாமல் இருந்து வந்தது.

வாரச் சந்தையை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் நகராட்சி ஆணையா், வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனா்.

அமைதிக் கூட்டம்:

கோரிக்கையின் பேரில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கி.விமலா தலைமையில் சனிக்கிழமை அமைதிக் கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் எஸ்.திருமலை, நகராட்சி ஆணையா் பீரித்தி, டி.எஸ்.பி (பொ) ரமேஷ், காவல் ஆய்வாளா் முரளிதரன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சமூக இடைவெளியுடன் வாரச்சந்தையை செயல்படுத்தவும், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்க வேண்டும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் உள்ளூா் காய்கறி வியாபாரிகள், இரு வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள், வருவாய்த் துறை, போலீஸாா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com