திருவண்ணாமலையில் 10-ஆவது மாதமாக கிரிவலம் செல்லத் தடை

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் 10-ஆவது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் 10-ஆவது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வருவது வழக்கம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

தற்போது, நாடு முழுவதும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, டிசம்பா் மாத பெளா்ணமி நாள்களான 29, 30-ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தடை விதித்தாா். இத்துடன் 10-ஆவது மாதமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com