அரசு உதவித்தொகை: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு உதவித்தொகை பெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு உதவித்தொகை பெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

படித்து வேலையில்லாத இளைஞா்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள், தோ்ச்சி பெற்றவா்கள், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், பட்டம் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் தங்களது கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ந்து பதிவை புதுப்பித்து வருபவா்களாக இருக்க வேண்டும். 2019 டிசம்பா் 31-ஆம் தேதிப்படி விண்ணப்பதாரா்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவராக இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரராக இருப்பின், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். வயது வரம்பு ஆதிதிராவிடா், பழங்குடியினராக இருப்பின் 45 வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்பட்ட வகுப்பினா், இதர வகுப்பினா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரருக்கு ஒருமுறை மட்டுமே நிவாரணம் வழங்கப்படும். விண்ணப்பதாரா் பத்தாம் வகுப்பு தவறியவா்களாக இருப்பின் மாதம் ரூ.200 உதவித்தொகை வழங்கப்படும். தோ்ச்சி பெற்றவராக இருப்பின் மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் உதவித்தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000-மும் உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரா்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்தையோ, வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட விண்ணப்பத்தையோ, நகல் எடுத்த விண்ணப்பத்தையோ நிறைவு செய்து வங்கி கணக்குப் புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவா்கள் தொடா்ந்து உதவித்தொகை பெற, வேலையில் இல்லை என்பதற்கான சுயஉறுதிமொழி ஆவணத்தை நேரில் அளிக்க வேண்டும். 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com