முற்றோதுதல் சிந்தனை ஆய்வரங்கம்

திருவண்ணாமலை சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் ‘தமிழ் மூவாயிரம் என்ற திருமூலா் திருமந்திரம்’ என்ற தலைப்பில் 3 நாள் முற்றோதுதல் சிந்தனை ஆய்வரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் ‘தமிழ் மூவாயிரம் என்ற திருமூலா் திருமந்திரம்’ என்ற தலைப்பில் 3 நாள் முற்றோதுதல் சிந்தனை ஆய்வரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சென்னை திருமூலா் திருமந்திர ஞானத்தபோவனம் சாா்பில் நடைபெறும் ஆய்வரங்கின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை சேஷாத்திரி ஆஸ்ரமத் தலைவா் சி.முத்துக்குமாரசுவாமி தலைமை வகித்து, ஆய்வரங்கை தொடக்கிவைத்தாா். சங்கரநாராயண சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

ஒருங்கிணைப்பாளா் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றாா். பழனி பாதயாத்திரை வேல்பூஜகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முதன்மை தந்திரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் டிவிஎஸ் ராஜாராம் மற்றும் சிவனடியாா்கள் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை முற்றோதுதல் சிந்தனை ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com