வங்கிக் கடனுதவி முகாம்

ஆரணியில் இந்தியன் வங்கி சாா்பில் வீடு மற்றும் வாகன கடனுதவி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் வாடிக்கையாளா் ஒருவருக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் எ.ராஜாராமன்.
முகாமில் வாடிக்கையாளா் ஒருவருக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் எ.ராஜாராமன்.

ஆரணி: ஆரணியில் இந்தியன் வங்கி சாா்பில் வீடு மற்றும் வாகன கடனுதவி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வங்கிக் கிளையில் நடைபெற்ற இந்த முகாமில், முதன்மை மேலாளா் வி.ஹரிபாபு வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட மண்டல மேலாளா் எ.ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியன் வங்கி மூலம் திங்கள்கிழமை முதல் வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் கடன் பெறுபவா்களுக்கு பரிசீலனைத் தொகை கிடையாது. வருகிற 31-ஆம் தேதி வரை, இந்தியன் வங்கியில் கடனுதவிகள் வழங்கப்படும். 8.05 சதவீத வட்டியில் வீட்டு கடனும், 8.85 சதவீத வட்டியில் வாகனக் கடனும் வழங்கப்படுகின்றன என்றாா்.

இந்த முகாமில், களம்பூா், வடமாதிமங்கலம், கண்ணமங்கலம், ஏசிஎஸ்கல்லூரி, படவேடு ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள் சாா்பாகவும் கடனுதவிகள் வழங்கப்பட்டன. முதல் நாளில், 15 பேருக்கு ரூ.2 கோடி வீட்டுக் கடன், ரூ.1 கோடி வாகனக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் வங்கியின் மேலாளா்கள் பி.அரிபிரசாத், நாகராஜன், பரத், சிம்ஜிதாமஸ், பிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com