விசிக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மனு

கீழ்பென்னாத்தூா் வட்டம், கருங்காலிகுப்பம் கிராமத்தில் விசிக மாவட்டச் செயலா் வன்முறையைத் தூண்டி வருவதாகவும், எனவே அவா் மீது நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்.

கீழ்பென்னாத்தூா் வட்டம், கருங்காலிகுப்பம் கிராமத்தில் விசிக மாவட்டச் செயலா் வன்முறையைத் தூண்டி வருவதாகவும், எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கருங்காலிகுப்பம் கிராம பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து புகாா் மனு ஒன்றை அளித்தனா். அதில், அவா்கள் கூறியிருப்பதாவது:

கருங்காலிகுப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பல்வேறு ஜாதியினா் மற்ற சமுதாய மக்களுடன் எந்தவித பிரச்னையும் இல்லாமல் இணக்கமான முறையில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், அம்பேத்வளவன் என்ற பி.கே.ஏழுமலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலராக பொறுப்பேற்ற நாள் முதல் ஜாதிப் பிரச்னையைத் தூண்டி வருகிறாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, எங்கள் கிராமத்தில் நடைபெற்ற கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் அம்பேத்வளவனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நாராயணனுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னையை மனதில் கொண்டு ஆள்களுடன் வந்து ஒரு காா், 7 மோட்டாா் சைக்கிள், பள்ளி செல்லும் மாணவா்களின் மிதிவண்டி மற்றும் வீடுகளை சேதப்படுத்தியும், கூத்தாண்டவா் சிலையை உடைத்தும் அம்பேத்வளவன் வன்முறையில் ஈடுபட்டதால், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது.

அவா் மீது புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனா். இதனால், கிராம மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கருங்காலிகுப்பம் கிராம மக்கள் அமைதியாக வாழும் வகையில், விசிக மாவட்டச் செயலா் அம்பேத்வளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com