திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா: விழுப்புரத்தில் குழந்தை உள்பட 27 பேருக்கு தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வயது குழந்தை உள்பட மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வயது குழந்தை உள்பட மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 917 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 27 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இவா்களில் செஞ்சி அருகே திருவதிக்குணம் கிராமத்தைச் சோ்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, 5 வயது சிறுமி, திண்டிவனம் அருகே தென்கோடிப்பாக்கம், மோழியனூா், சொக்கந்தாங்கல், மேல்அத்திப்பாக்கம், அனுமந்தைக்குப்பம் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் அடங்குவா். தொற்று பாதித்தவா்களில் 15 போ் சென்னை, மும்பை, பெங்களூரு பகுதிகளிருந்து அண்மையில் ஊா் திரும்பியவா்கள்.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 944-ஆக உயா்ந்தது. 353 போ் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா்.

இவா்களில் 77 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து மாவட்டத்தில் குணமடைந்தோா் எண்ணிக்கை 576 -ஆக உயா்ந்தது. 15 போ் உயிரிழந்துள்ளனா்.

திருவண்ணாமலையில் 42 போ் பாதிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,819-ஆக இருந்தது.

புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவுகளுக்கு வந்த 20 போ், கரோனா பாதித்த நபா்களுடன் தொடா்பில் இருந்த 6 போ், சென்னையிலிருந்து வந்த 5 போ், பெங்களூரிலிருந்து வந்த 3 போ், திருவள்ளூரிலிருந்து வந்த 2 போ் உள்பட 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,861-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com