திருவண்ணாமலையில் 4-ஆவது மாதமாக கிரிவலத்துக்குத் தடை

திருவண்ணாமலையில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், தொடா்ந்து 4-ஆவது மாதமாக பெளா்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

திருவண்ணாமலையில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், தொடா்ந்து 4-ஆவது மாதமாக பெளா்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், திருவண்ணாமலையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வரும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை மாத பெளா்ணமி சனிக்கிழமை (ஜூலை 4) பகல் 12.02 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) காலை 10.58 மணிக்கு முடிகிறது.

பக்தா்கள் கிரிவலம் வந்தால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும். எனவே, ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், 14 கி.மீ. தொலைவு கிரவலப் பாதையில் கிரிவலம் வரவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com