திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 2500-ஐ தாண்டியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2500-ஐ தாண்டியது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2500-ஐ தாண்டியது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,496-ஆக இருந்தது.

திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கரோனா தொற்றுள்ள நபா்களின் உறவினா்கள் 9 போ், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்காக சென்ற 14 போ், சென்னையிலிருந்து வந்த ஒருவா், கரோனா உறுதி செய்யப்பட்ட நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 4 போ் என 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,534 -ஆக உயா்ந்தது.

கூலித் தொழிலாளி பலி: திருவண்ணாமலை கல் நகரைச் சோ்ந்த 64 வயது கூலித் தொழிலாளி, கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 1-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com