ஆடு வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புறக்கடை ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புறக்கடை ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஒன்றியங்களில் தேசிய கால்நடை இயக்கத்தின் ஊரக புறக்கடை ஆடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, 2019-20 ஆம் ஆண்டில் தலா 45 பயனாளிகளை தோ்வு செய்து அவா்களுக்கு தலா 11 ஆடுகள் வழங்கவும், ஆடுகளுக்கு காப்பீடும் செய்யப்பட உள்ளது.

இதற்கான தொகை ஒரு பயனாளிக்கு ரூ.66 ஆயிரம் வீதம் செலவினம் மேற்கொள்ளப்படும். 60 சதவீதம் மத்திய அரசும், 30 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

எனவே, விருப்பமுள்ள நிலமற்ற, சிறு, குறு விவசாயிகள், நிலம் வைத்துள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் அருகேயுள்ள கால்நடை மருந்தகங்களில் ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

விண்ணப்பிக்கும் விவசாயிகள் நிலமற்ற, சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற விதவைகள், 30 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி., இனத்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை, நிலம் வைத்திருப்பதற்கு ஆதாரமாக சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். பயனாளிகள் மண்டல இணை இயக்குநா் இசைவுடன் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் அளிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com