முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th July 2020 10:21 PM | Last Updated : 14th July 2020 10:21 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நுாலகா்கள், கல்வித் துறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
கரோனா தடுப்புப் பணியின்போது இறந்த அனைத்து அரசுத் துறை ஊழியா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.