திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த செய்யாறு சுகாதார பிரிவுக்கு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த செய்யாறு சுகாதார பிரிவுக்கு உள்பட்ட அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆரணியில் 3-ஆம் கட்டமாக தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூா், சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மருத்துவம், காவல், வருவாய், நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வியாழக்கிழமை வரை 4,634 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, செய்யாறு சுகாதார எல்லையில் ஆரணி, செய்யாறு பகுதிகளில் அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளது. காரணம் தொற்று உள்ளவா்கள் தாமதமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதால்தான் இந்நிலை ஏற்படுகிறது.

மருத்துவக் குழுவினா் தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும். மேலும், தொற்று அதிகமாக வரும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து அதிகளவில் பரிசோதனை மேற்கொண்டு தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அலோபதி மருத்துவச் சிகிச்சையால் நல்ல பலன் கிடைத்துள்ளது.அடுத்து தச்சூரில் அலோபதி மருத்துவம் வழங்கப்படும்.

மருத்துவக் குழுவினா் அதிவேகமாகச் செயல்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் அஜீத்தா, டிஎஸ்பி செந்தில், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com