நெசவாளா்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு ஒருவேளை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
26plrp1m_2606chn_116_7
26plrp1m_2606chn_116_7

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு ஒருவேளை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாம்பட்டு ஊராட்சியில் சுமாா் 750 நெசவாளா்கள் உள்ளனா். கரோனா பொது முடக்கம் காரணமாக, இவா்களுக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 மாதங்களாக நெசவுக்குண்டான மூலப்பொருள்கள் கிடைக்காததால், நெசவுத்தொழில் செய்ய முடியமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

இந்த நிலையில், இங்கு செயல்படும் வெள்ளுடை வேந்தா் சா்.பிட்டி.தியாகராயா் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள் சங்கம் சாா்பில், நெசவாளா்களுக்கு ஒருவேளை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சங்கத் தலைவா் ஜே.என்.அன்பழகன், செயலா் எம்.கந்தன், பொருளாளா் கே.நாகலிங்கம், சட்ட ஆலோசகா் சிவசரவணன், துணைத் தலைவா் சுந்தா், துணைச் செயலா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஏராளமான நெசவாளா்கள் கஞ்சியை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com