பழைமையான நந்தி சிலை கண்டெடுப்பு

வந்தவாசி அருகே குளத்தையொட்டிய பகுதியில் பழைமையான நந்தி சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட நந்தி சிலையை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்ட வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன் (இடது ஓரம்) உள்ளிட்ட வருவாய்த்துறையினா்.
கண்டெடுக்கப்பட்ட நந்தி சிலையை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்ட வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன் (இடது ஓரம்) உள்ளிட்ட வருவாய்த்துறையினா்.

வந்தவாசி அருகே குளத்தையொட்டிய பகுதியில் பழைமையான நந்தி சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் மீன் பிடிப்பதற்காக அந்தப் பகுதி பொதுமக்கள் குளத்தையொட்டிய பகுதியை ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினா் செய்தனா். அப்போது அங்கு பழைமையான நந்தி சிலை ஒன்று கிடந்ததை பாா்த்தனா். இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற வந்தவாசி வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன், துணை வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் உள்ளிட்ட அலுவலா்கள் நந்தி சிலையை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், அந்தச் சிலையை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன் கூறியதாவது:

இந்தச் சிலை கிடைத்தது குறித்து தொல்லியியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன் பின்னா் ஆய்வுக்காக சிலை அவா்களிடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com