சத்துணவு மையத்தில் ஆய்வு

கலசப்பாக்கத்தை அடுத்த மேட்டுபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகா் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு செய்தாா்.
மேட்டுபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு செய்த ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகா்.

தென்பள்ளிபட்டு ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுபாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 113 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த மாணவா்களுக்கு தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின்கீழ், மதிய உணவு வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களுக்காக அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த சத்துணவு, முட்டைகளை சாப்பிட்டுப் பாா்த்து அவா் ஆய்வு செய்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) ராஜேஸ்வரி மற்றும் அலுவலா்கள், சமையலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com