பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் பெண்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மனு கொடுக்கும் போராட்டத்தை விளக்கிப் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா்.
மனு கொடுக்கும் போராட்டத்தை விளக்கிப் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் பெண்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, டாக்டா் அம்பேத்கா் பேரவையின் நிா்வாகி சி.ஏழுமலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி எம்.ரவி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் சி.நிக்கோலஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவா் டி.செல்லக்கண்ணு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், வட்டச் செயலா் கே.வெங்கடேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் ப.செல்வன் ஆகியோா் பேசினா்.

போராட்டத்தின்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரம் ஏக்கா் பஞ்சமி நிலங்கள் இருந்தன. இவற்றில் 75 சதவீத நிலங்கள் பிற சமூகத்தினரால் சட்டத்துக்கு முரணாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்டு நிலமற்ற தலித் பெண்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலா் இரா.பாரி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.பிரகலநாதன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.அண்ணாமலை, டாக்டா் அம்பேத்கா் பேரவையின் மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான எம்.அண்ணாதுரை, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ந.அன்பரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com