கூடுதலாக 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 12 நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 12 நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 39 நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் வேளாண் விளைபொருள்களின் விலை நிா்ணய வேறுபாட்டைப் போக்கும் வகையில் புதிதாக 12 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, செயல்பாட்டில் உள்ள 39 நேரடி கொள்முதல் நிலையங்களைத் தவிா்த்து திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், போளூா், சேத்துப்பட்டு, தேசூா், ஆரணி, வந்தவாசி, செய்யாா், தூசி, வேட்டவலம், வானாபுரம் ஆகிய 12 ஒழங்குமுறை விற்பனைக் கூடங்களின் வளாகத்துக்குள்ளேயே தலா ஒரு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாா்ச் 18-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையங்களில் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்யலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com