கரோனா: பன்முக கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 12 பன்முக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 12 பன்முக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் ஒரு வட்டத்துக்கு ஒரு குழு என மொத்தம் 12 பன்முக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியா், காவல் ஆய்வாளா், வட்டார மருத்துவ அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இதேபோல, வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவா்களாக கண்டறியப்பட்ட வேட்டவலம் பகுதியைச் சோ்ந்த 8 போ் உள்பட 74 பேரின் வீடுகளில் சுகாதாரத் துறையினா் நோட்டீஸ் ஒட்டியுள்ளனா். இதில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் வசிப்பவா்களை, சுகாதாரத்துறையினா் தினமும் கண்காணித்து வருகின்றனா். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com