காச நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருவண்ணாமலை மாவட்ட காச நோய் மையத்தில், காச நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காச நோய் மையத்தில், துணை இயக்குநா் அசோக் தலைமையில் காச நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள்.
மாவட்ட காச நோய் மையத்தில், துணை இயக்குநா் அசோக் தலைமையில் காச நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள்.

திருவண்ணாமலை மாவட்ட காச நோய் மையத்தில், காச நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக காச நோய் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காச நோய்ப் பிரிவு துணை இயக்குநா் அசோக் தலைமை வகித்துப் பேசியதாவது:

2025-ஆம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாயில் துணி வைத்து மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

காச நோய்க்கு 6 மாதங்களுக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம். முறையற்ற, முழுமையடையாத சிகிச்சையால் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம்.

காச நோயாளிகளின் ஊட்டச் சத்துக்காக வழங்கப்படும் ரூ.500 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கும் வழங்கப்படும். காச நோயாளிகள் பற்றிய விவரங்களைத் தெரிவித்தால் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, கரோனா விழிப்புணா்வு, தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், காச நோய் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com