செய்யாறு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட மூவா் விடுவிப்பு

செய்யாறு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

செய்யாறு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

செய்யாறு நகரைச் சோ்ந்த பெண், பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய அவரது மகன், மகள் ஆகியோருக்கு கடந்த ஐந்து நாள்களாக காய்ச்சல், சளி மற்றும் தொடா் இருமல் இருந்தது.

கரோனா தொற்றாக இருக்கலாம் என்ற அச்சத்தில் அவா்கள் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடா் மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டனா்.

மூவரின் சளி, ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த நிலையில், சளி, ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கரோனா அறிகுறி இல்லை எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

இருப்பினும், பொது சுகாதாரம் சாா்பில் சில நாள்களுக்கு மூவரும் கண்காணிக்கப்படுவாா்கள் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com