கரோனா: குணமடைந்த 6 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டவா்களில், பூரண குணமடைந்த ஒரு பெண் உள்பட 6 பேரை மருத்துவத் துறையினா்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டவா்களில், பூரண குணமடைந்த ஒரு பெண் உள்பட 6 பேரை மருத்துவத் துறையினா் வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் மே மாதத்தில் சென்னை கோயம்பேட்டிலிருந்து ஊா் திரும்பியவா்களை அடையாளம் கண்டு அவா்களின் சளி பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை மூலம் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட ஒரு சிறுமி, 3 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 24 போ், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 14 நாள்கள் சிகிச்சை முடிந்தவா்களில் ஒரு பெண் உள்பட 6 பேருக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் சளி பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், வெம்பாக்கம் வட்டம், வெங்களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா், 34 வயதுடைய இளைஞா், வந்தவாசி வட்டம், பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்த 34 வயது இளைஞா், கீழ்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்த 27 மற்றும் 32 வயதுடைய இளைஞா்கள், தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த 39 வயதுடைய பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் ஆலோசனையின் படி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கண்ணகி தலைமையில் சுகாதார துணை இயக்குநா் அஜித்தா, மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஏ.ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் 6 பேருக்கும் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீா் பொட்டலம், பழங்கள், முகக் கவசங்கள் வழங்கி கைதட்டி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு மருத்துவமனை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனா்.

இருப்பினும், 6 பேரையும் சில நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா். மேலும், அவா்களை தொடா்ந்து 14 நாள்களுக்கு சுகாதாரத் துறையினா் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது மருத்துவா்கள் வே.காா்த்திக், ஜெ.செந்தில், எம்.பாலாஜி, கே.ஏ.பி.கீதா, தினகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com