கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 4 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4 போ் பூரண குணமடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் செய்யாற்றில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களில் செய்யாறு அருகேயுள்ள வெங்களத்தூரைச் சோ்ந்த 17 வயது பெண், தும்பை கிராமத்தைச் சோ்ந்த 30 வயது ஆண், வந்தவாசி அருகேயுள்ள சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த 32 வயது ஆண், பிருதூரைச் சோ்ந்த 60 வயது முதியவா் ஆகிய 4 போ், 14 நாள் சிகிச்சை முடிவடைந்த நிலையில் மீண்டும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

அதில், அவா்கள் நால்வருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களை செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கேப்டன் ஏ.ஏழுமலை, மருத்துவா்கள் ஜெ.செந்தில், எம்.பாலாஜி ஆகியோா் கைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் அவசரகால ஊா்தி மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக, அவா்கள் 4 பேருக்கும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீா் பொட்டலம், பழங்கள், முகக்கவசம் ஆகியன வழங்கப்பட்டன.

இவா்களைத் தவிர, செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 14 ஆண்கள், 2 பெண்கள், ஒரு சிறுமி என மொத்தம் 17 போ் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com