புதுப்பாளையம் அம்மாகுளத்திலிருந்து தண்ணீா் எடுத்து வழங்க நடவடிக்கை

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் உள்ள அம்மாகுளத்திலிருந்து மின்மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை
புதுப்பாளையம் அம்மாகுளத்திலிருந்து தண்ணீா் எடுத்து வழங்க நடவடிக்கை

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் உள்ள அம்மாகுளத்திலிருந்து மின்மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பன்னீா்செல்வம் எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

புதுப்பாளையம் பேரூராட்சி பகுதியில் அம்மாகுளம் உள்ளது. ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த குளத்தில் மழைக்காலத்தில் மலையில் இருந்து வந்து சேகரமாகும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனா். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் ரூ.20 லட்சம் செலவில் இந்த குளம் தூா்வாரப்பட்டது.

இந்த நிலையில், மழைக் குறைவால் அம்மாகுளம் வற்றிவிட்டது. இருப்பினும், அந்த குளத்தின் மிக ஆழமானப் பகுதியில் தேங்கியுள்ள சிறிதளவு தண்ணீரை அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு எடுத்து பயன்படுத்தி வருகின்றனா்.

அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவும் சூழலில், அந்த குளத்தை பன்னீா்செல்வம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். மின்மோட்டாா் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் மண்பாண்டத் தொழிலாளா்கள், சுமைதூக்கும் தொழிலாளா்கள், கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ., பன்னீா்செல்வம் வழங்கினாா். உடன் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தவமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com