மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், வருகிற 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், வருகிற 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறும் வகையில், வாரம்தோறும் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களுக்கு வெகு தொலைவிலிருந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதால், ஆரணி, வந்தவாசி, செங்கம், கீழ்பென்னாத்தூா், வெம்பாக்கம், தண்டராம்பட்டு, செய்யாறு, ஜமுனாமரத்தூா், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, நவம்பா் 3-ஆம் தேதி ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதேபோல, நவ. 5-ஆம் தேதி - வந்தவாசி, 7-ஆம் தேதி - செய்யாறு, 10-ஆம் தேதி - கீழ்பென்னாத்தூா், 12-ஆம் தேதி - வெம்பாக்கம், 18-ஆம் தேதி - தண்டராம்பட்டு, 19-ஆம் தேதி - செங்கம், 24-ஆம் தேதி - ஜமுனாமுத்தூா், 25-ஆம் தேதி சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், குடும்ப அட்டை (ஸ்மாா்ட் காா்டு), ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 4 புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com