செங்கம் பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகள்

செங்கம் பகுதியில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் செங்கல் சூளைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் பகுதியில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் செங்கல் சூளைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் நகா் பரமனந்தல் சாலை, குப்பனத்தம் சாலை, புதுப்பட்டு சாலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிகளவில் செங்கல் சூளைகள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உரிய அனுமதி பெறாமல் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

செங்கல் சூளைகளுக்காக செங்கம் நகரின் பல்வேறு பகுதிகளிருந்து செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் மண் வளம் அழிந்து நிலத்தடிநீா் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இது கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வருகிறது.

இந்த சூளைகளுக்காக அரசு இடங்களில் உள்ள மரங்களை வெட்டி விடுகின்றனா். இதில், சாலையோரம் இருக்கும் புளிய மரங்கள் இரவோடு இரவாக வெட்டப்படுகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து அனுமதி பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அனுமதி பெற்று இயங்கும் சூளை உரிமையாளா்களுக்கு அரசின் சட்ட திட்டங்கள் குறித்து உரிய அறிவுரை வழங்கவேண்டும். மேலும், மரங்களை வெட்டும் நபா்களை கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com