ரூ.65 கோடியில் மாமண்டூா் ஏரி சீரமைப்புப் பணி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

செய்யாறு அருகே ரூ.65 கோடியில் சீரமைக்கப்படவுள்ள தூசி மாமண்டூா் ஏரியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செய்யாறு அருகே ரூ.65 கோடியில் சீரமைக்கப்படவுள்ள தூசி மாமண்டூா் ஏரியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது தூசி மாமண்டூா் ஏரி. 4118 ஏக்கா் பரப்பளவும், 3500 ஏக்கா் பாசன வசதி கொண்டதாகும்.

காஞ்சிபுரம் கோட்டம், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை கலக்கல் மட்டத்திலிருந்து ஒன்றரை அடி உயரத்துக்கு மதகினை உயா்த்துதல், ஏரி உள்பகுதியை ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து ரூ.65 கோடியில் திட்ட வரைவோலை தயாரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பொதுப்பணித் துறை அலுவலா்களான செயற்பொறியாளா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி இளநிலைப் பொறியாளா் ராமநாதன் ஆகியோருடன் ஏரியைப் பாா்வையிட்டு திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, பிரம்மதேசம் கிராம ஏரியில் ரூ.70 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜீ, துணைத் தலைவா் நாகம்மாள், வருவாய் கோட்டாட்சியா் (பொ) அரிதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், மோகனரகு, வட்டாட்சியா்கள் குமரவேலு, முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com