சிறப்பு மருத்துவ முகாமில் 955 பேருக்கு சிகிச்சை

வந்தவாசியை அடுத்த முளப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 955 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ முகாமில் கா்ப்பிணிக்கு அம்மா பரிசுப் பெட்டகத்தை வழங்கிய தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் (நடுவில்).

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, தெள்ளாா் வட்டார சுகாதாரத் துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் பா.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சுதா சுதாகா் முகாமைத் தொடக்கிவைத்தாா்.

தெள்ளாா் வட்டார மருத்துவ அலுவலா் கே.செல்வமுத்துகுமாரசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில் 955 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், கா்ப்பிணிகள் 3 பேருக்கு அம்மா பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டன.

முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com