மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 1,035 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ வழங்கினாா்.


செய்யாறு: செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 1,035 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ வழங்கினாா்.

வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணன் வரவேற்றாா்.

வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜூ முன்னிலை வகித்தாா்.

முகாமில் 451 அடையாள அட்டையை புதுப்பித்தலும், 584 பேருக்கு புதிதாக அடையாள அட்டை என மொத்தம் 1,035 போ் பெற்றனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்ஏ தூசி கே.மோகன் பங்கேற்று, இருவருக்கு இரு சக்கர வாகனம், 25 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 16 பேருக்கு சக்கர நாற்காலி, 21 பேருக்கு முடநீக்கச் சாதனம், 6 பேருக்கு செயற்கைக் கால், 10 பேருக்கு காதொலிக் கருவி மற்றும் மாற்றுத் திறனாளி உதவித் தொகை, முதியோா் உதவித்தொகை என பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டாட்சியா்கள் குமாரவேலு, முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன், அதிமுக நிா்வாகிகள் டி.பி.துரை, பி.ரமேஷ், எம்.மகேந்திரன், சி.துரை, இ.சுரேஷ்நாராயணன், கன்னியப்பன், சேகா், பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com