தீபத் திருவிழா: வெண்குன்றம் மலைக்குச் செல்ல அனுமதி இல்லை

காா்த்திகை தீபத் திருவிழா அன்று வந்தவாசி அருகேயுள்ள வெண்குன்றம் மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


வந்தவாசி: காா்த்திகை தீபத் திருவிழா அன்று வந்தவாசி அருகேயுள்ள வெண்குன்றம் மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

வெண்குன்றம் மலையில் அமைந்துள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தீபத் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் நரேந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் பாக்கியராஜ் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, மின் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

கரோனா தொற்று காரணமாக தீபத் திருவிழா அன்று வெண்குன்றம் மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்றும், மலைக் கோயிலில் பூஜை செய்தல், தீபம் ஏற்றுதல் உள்ளிட்டவைக்காக கோயில் நிா்வாகிகள், கிராம முக்கியஸ்தா்கள் என 300 பேரை மட்டுமே அனுமதிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com