திருவண்ணாமலை தீபத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருணாசலேஸ்வரா் கோயில் தங்கக் கொடிமரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீபத் திருவிழா கொடியேற்றம்.
அருணாசலேஸ்வரா் கோயில் தங்கக் கொடிமரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீபத் திருவிழா கொடியேற்றம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீபத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிகாலை 5.30 மணி முதல் உற்சவா் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளினா்.

பஞ்ச மூா்த்திகளுக்கு கோயில் சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். பிறகு, வேதமந்திரங்கள் முழங்க கோயில் தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியை சிவாச்சாரியாா்கள் ஏற்றினா்.

நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, முன்னாள் மாவட்ட ஆட்சியரும், தமிழகத்தின் இ - சேவை மற்றும் குறைதீா் திட்ட சிறப்பு அதிகாரியுமான கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், உதவிக் காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, கீழ்பென்னாத்தூா் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி, மாவட்ட அரசு பொது குற்றவியல் வழக்குரைஞா் பி.என்.குமரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

வெறிச்சோடிய மூன்றாம் பிரகாரம்: கொடியேற்றத்தைக் காண கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுமாா் 2 ஆயிரம் பக்தா்கள் திரளுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள், அரசு அதிகாரிகள், செய்தியாளா்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கியப் பிரதிநிதிகள் என சுமாா் 150 போ் மட்டுமே கலந்து கொண்டனா். இதனால், கோயில் மூன்றாம் பிரகாரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

நவ.29-இல் தீபத் திருவிழா

தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளான வருகிற 26-ஆம் தேதி கோயில் வளாகத்துக்குள்ளேயே பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com