திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. 
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது


காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, 4 மணிக்கு கோவில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை சிவாச்சாரியா்கள் கைகளில் சுமந்தபடி கோவில் 2, 3-ஆம் பிரகாரங்கள் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் வலம் வந்தனர்.

இதைத் தொடர்ந்து, மகா தீபமும் ஏற்றப்பட்டது.

இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தீரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com