14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்:ஒருவா் கைது

திருவண்ணாமலையில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட 14 டன் ரேஷன் அரிசி மூட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட 14 டன் ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருவண்ணாமலையில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாரியம்மன் கோயில், 7-ஆவது தெருவில் உள்ள ஒரு கிட்டங்கியில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நகர காவல் உதவி கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு அந்தக் கிட்டங்கியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 296 மூட்டைகளில் இருந்த 14 டன் ரேஷன் அரிசி, வேன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், ரேஷன் அரிசியை விற்க வந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த சுப்பிரமணி (65) என்பவரை கைது செய்தனா்.

மேலும், கிட்டங்கி உரிமையாளரான பிச்சாண்டி (45) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com