பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு

செங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது.

செங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது.

விழிப்புணா்வு நாடகத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணகுமரன் தொடக்கிவைத்தாா்.

நாடகக் குழுவினா், கரோனா தொற்று பரவும் விதம், அதனால் ஏற்படும் தீமைகள், அதிலிருந்து காப்பாற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நடித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

காவல் ஆய்வாளா்கள் சாலமோன்ராஜா, செங்குட்டவன் உள்பட காவலா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com