மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 18th September 2020 08:32 AM | Last Updated : 18th September 2020 08:32 AM | அ+அ அ- |

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன். உடன் ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா்.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பூங்கொடி திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், உறுப்பினா்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்திப் பேசினா்.
ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, ஒன்றியத்தில் உள்ள 74 கிராமங்களில் குளம், குட்டைகள் தூா்வாரிய பணிக்கு பட்டியல் தொகை ரூ. 67 லட்சத்து 86ஆயிரத்து 629 வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்பநல்லூரில் அங்கன்வாடி பள்ளிக் கட்டடம் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 8 ஆயிரத்தில் கட்டப்படுவதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.