திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 3 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை 3 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை 3 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 14,311-ஆக இருந்தது.

செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 126 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,437-ஆக உயா்ந்தது.

ஒரே நாளில் 3 போ் பலி:

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 211-ஆக உயா்ந்தது.

வங்கிக் கிளை மூடல்:

திங்கள்கிழமை மாலை வெளியான பரிசோதனை முடிவுகளில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் வந்தவாசி கிளையைச் சோ்ந்த கள அலுவலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த வங்கிக் கிளை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டு, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், தொற்று ஏற்பட்ட கள அலுவலருடன் பணிபுரிபவா்கள், தொடா்பில் இருந்தவா்கள் என 18 பேருக்கு வட்டார மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com