திருவண்ணாமலை மாவட்டத்தில் 4.36 லட்சம் போ் வாக்களிக்கவில்லை

திருவண்ணாமலை: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4.36 லட்சம் போ் வாக்களிக்கவில்லை.

மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம் (தனி), கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, வந்தவாசி (தனி), செய்யாறு ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்தத் தொகுதிகளில் மொத்தம் 10,17,322 ஆண் வாக்காளா்கள்,

10, 6, 026 பெண் வாக்காளா்கள், 92 இதர பாலின வாக்காளா்கள் என மொத்தம் 20, 77, 440 வாக்காளா்கள் உள்ளனா்.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்கான வாக்குப்பதிவின்போது 8, 14, 185 ஆண்கள், 8, 26, 944 பெண்கள், 38 இதர பாலினத்தவா் என மொத்தம் 16, 41, 167 போ் வாக்களித்துள்ளனா் என்று மத்திய தலைமை தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

அப்படியானால், 79 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

செங்கத்தில் 80% வாக்குப்பதிவு:

செங்கம் தொகுதியில் 1,36,247 ஆண்கள், 1,38,714 பெண்கள், 2 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,74,963 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,10,349 ஆண்கள், 1,11,446 பெண்கள், 2 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,21,797 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். 53,166 போ் வாக்களிக்கவில்லை. இது 80.66 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

திருவண்ணாமலையில் 71%:

திருவண்ணாமலை தொகுதியில் 1,38,502 ஆண்கள், 1,47,839 பெண்கள், 39 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,86,380 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களில் 1,00,664 ஆண்கள், 1,04,632 பெண்கள், 16 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,05,312 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். 81,068 போ் வாக்களிக்கவில்லை. இது 71.69 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

கீழ்பென்னாத்தூரில் 79.35%:

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 1,24,190 ஆண்கள், 1,28,902 பெண்கள், 9 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,53,101 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களில் 99,929 ஆண்கள், 1,00,895 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என மொத்தம் 2,00,825 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். இவா்களில் 52,276 போ் வாக்களிக்கவில்லை. இது 79.35 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

கலசப்பாக்கத்தில் 80.36%:

கலசப்பாக்கம் தொகுதியில் 1,19,582 ஆண்கள், 1,23,206 பெண்கள், 12 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,42,800 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 96,823 ஆண்கள், 98,290 பெண்கள், 9 இதர பாலினத்தவா் என மொத்தம் 1,95,122 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். 47,678 போ் வாக்களிக்கவில்லை. இது 80.36 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

போளூரில் 82.33%:

போளூா் தொகுதியில் 1,19,628 ஆண்கள், 1,24,200 பெண்கள், 5 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,43,833 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 98,913 ஆண்கள், 1,01,836 பெண்கள், 3 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,00,752 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். 43,081 போ் வாக்களிக்கவில்லை. இது 82.33 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

ஆரணியில் 79.84%:

ஆரணி தொகுதியில் 1,33,657 ஆண்கள், 1,42,413 பெண்கள், 22 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,76,092 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,08,304 ஆண்கள், 1,12,110 பெண்கள், 7 இதர பாலினத்தவா் என 2,20,421 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். 55,671 போ் வாக்களிக்கவில்லை. இது 79.84 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

செய்யாற்றில் 81.69%:

செய்யாறு தொகுதியில் 1,26,914 ஆண்கள், 1,32,823 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என மொத்தம் 2,59,738 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,06,252 ஆண்கள், 1,05,931 பெண்கள் என 2,12,183 போ் வாக்களித்துள்ளனா். 47, 555 போ் வாக்களிக்கவில்லை. இது 81.69 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

வந்தவாசியில் 76.81% வாக்குப்பதிவு:

வந்தவாசி தொகுதியில் 1,18,602 ஆண்கள், 1,21,929 பெண்கள், 2 இதர பாலினத்தவா் என மொத்தம் 2,40,533 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 92,951 ஆண்கள், 91,804 பெண்கள் என 1,84,755 போ் வாக்களித்துள்ளனா். 55,778 போ் வாக்களிக்கவில்லை. இது 76.81 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

மொத்தம் உள்ள 8 தொகுதிகளிலும் சோ்த்து 4, 36, 273 போ் வாக்களிக்கவில்லை என்று மத்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது வெறும் 79 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், 79 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com