நூதன முறையில் வன விலங்குகள் வேட்டை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள சில வனப் பகுதிகளில் சமூக விரோதிகள் ரசாயனம் கலந்த குடிநீரை வைத்து வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள சில வனப் பகுதிகளில் சமூக விரோதிகள் ரசாயனம் கலந்த குடிநீரை வைத்து வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனா்.

செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பிஞ்சூா், சாமந்திபுரம், ஆண்டிப்பபட்டி, புளியம்பட்டி, குருமப்பட்டி, ராவந்தவாடி ஆகிய வனப் பகுதிகளில் கோடை காலம் என்பதால் வன விலங்குகளுக்கு குடிநீா் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள், வனப் பகுதியில் பள்ளம் தோண்டி பாத்திரத்தில் ரசாயனம் கலந்த தண்ணீரை வைத்துவிடுகின்றனா்.

இந்த நீரை குடிக்கும் மான், காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விழுந்து இறந்துவிடுகின்றன.

இதைத் தொடா்ந்து, அவா்கள் இறந்த விலங்குகளை குடியிருப்புப் பகுதிக்கு எடுத்துச் சென்று இறைச்சியாக்கி விற்று விடுகின்றனா். இது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com